உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரணை

Added : டிச 02, 2019
Advertisement

புதுடில்லி: 'தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்காமல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது' என, தி.மு.க., தொடர்ந்துள்ள வழக்கை, உச்ச நீதிமன்றம், வரும், 5ல் விசாரிக்கவுள்ளது.

தி.மு.க., சார்பில், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது: தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்காமலும், இட ஒதுக்கீடு தொடர்பான விஷயத்துக்கு தீர்வு காணப்படாமலும், சட்ட நடைமுறைகளை நிறைவேற்றாமலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு முன், மறுவரையறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை முடித்திருக்க வேண்டும் என்பது, விதிமுறை. ஏற்கனவே இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிலுவையில் உள்ளது.

எனவே, சட்ட நடைமுறைகளை முடித்து விட்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும்படி, தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் தேதியை, மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், தி.மு.க., தரப்பு வழக்கறிஞரான ஏ.எம்.சிங்வி, இது குறித்து நேற்று முறையிட்டதாவது:ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல், வரும், 6ல் துவங்குகிறது. சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், தேர்தல் நடவடிக்கைகளை துவங்குவதை ஏற்க முடியாது. எனவே, இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் முறையிட்டார். இதையடுத்து, இந்த மனுவை, நாளை மறுநாள்விசாரிப்பதாக, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X