கும்மிடிப்பூண்டி : போலீஸ் நிலையம் எதிரே, 10, 20 ரூபாய் நோட்டுகளை துண்டு செய்தது போல் கிடந்த காகித மூட்டையால் பரபரப்பு ஏற்பட்டது.
கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே, சாலையோரம், நேற்று ஓரு மூட்டை கிடந்தது. அதில், 10, 20 ரூபாய் நோட்டுகளை துண்டு செய்தது போல் வண்ண காகிதங்கள் இருந்தன.அதை போலீசார் சோதனையிட்டதில், அரவை இயந்திரத்தில் துண்டு செய்யப்பட்ட வண்ண காகித துண்டுகள் என்பது தெரியவந்தது.'டம்மி' ரூபாய் நோட்டுகளாக இருக்கக்கூடும் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மூட்டையில் கிடந்த காகித துண்டுகள், ரூபாய் நோட்டுகள் போன்று இருந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.