பிரதமரை அவமதிக்கும் சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பு| Dinamalar

பிரதமரை அவமதிக்கும் சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பு

Added : டிச 02, 2019
 பிரதமரை அவமதிக்கும்  சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பு

புதுடில்லி: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, 'ஊடுருவி யவர்கள்' என, காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதை கண்டித்து, லோக்சபாவில், பா.ஜ., உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

'ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர வேண்டும்' என, ஆளும் கட்சியினர் வலியுறுத்தியதால், சபை, சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நேற்று முன்தினம் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, 'பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், குஜராத்தில் இருந்து, டில்லிக்கு ஊடுருவியவர்கள்' என்றார். மன்னிப்பு கோருகிறேன்இந்த விவகாரம், நேற்று லோக்சபாவில் எதிரொலித்தது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:பா.ஜ.,வினர், என்னை வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர் என அடிக்கடி கூறுகின்றனர். ஆம்; நான் ஊடுருவிய நபர் தான். என்னைப் போல், மோடியும், அமித் ஷாஷம், குஜராத்தில் இருந்து டில்லிக்கு ஊடுருவியவர்கள் தான். இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கு, பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளி யில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியதாவது:நாட்டில் உள்ள பல கோடி மக்கள் ஓட்டளித்ததால் தான், மோடியும், அமித் ஷாவும், இந்த பதவி களுக்கு வந்துள்ளனர். அவர்களை அவமதிக்கும் வகையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகிறார். அவர் இவ்வாறு பேசுவதற்கு முன், அவரது கட்சியின் தலைவர் எங்கிருந்து ஊடுருவியவர் என்பதை கூற முடியுமா... தான் தெரிவித்த சர்ச்சைக்கு உரிய கருத்துக்காக, சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதையடுத்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். என் குடும்பத்தினர், வங்கதேசத்தில் இருந்து வந்த வர்கள் தான். என்னிடம் போதிய ஆவணம் இல்லை. அதற்காக, என்னை ஊடுருவியவன் என கூறினால், அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. நான் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளித்துஉள்ளேன். இதில், பா.ஜ., வினருக்கு திருப்தி இல்லை என்றால், மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக, பா.ஜ., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டு, மன்னிப்பு கோரும்படி அமளியில் ஈடுபட்டதால், சபை, சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் அமளிஇந்த விவகாரத்தால், ராஜ்யசபாவிலும் நேற்று பெரும் அமளி ஏற்பட்டது. 'ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பூபேந்தர் யாதவ் உள்ளிட்ட, பா.ஜ., உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். சபையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் இட்டனர். இதற்கு, திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சபையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X