வெளிநாடுகளுக்கு புலனாய்வு அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெளிநாடுகளுக்கு புலனாய்வு அதிகாரிகள்

Added : டிச 02, 2019

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பண மோசடி செய்யப்படுவதை தடுக்கும் வகையில், சுங்கத் துறையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள், இந்திய துாதரகங்களில் நியமிக்கப்பட உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து, தொழில், வர்த்தகம் உள்ளிட்டவை மூலமாக, இந்தியாவில் பண மோசடி செய்யப்படுவதை தடுக்க, சுங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் துாதரகங்களில் நியமிக்கப்படுகின்றனர்.அமெரிக்கா, நேபாளம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், இதற்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, பிரிட்டனின் லண்டன், ஹாங்காங், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், பெல்ஜியத்தின் புருசல்ஸ் நகரங்களில் உள்ள இந்தியத் துாதரகங்களில், சுங்கத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான முயற்சியில், வருவாய் புலனாய்வு துறை ஈடுபட்டுள்ளது. நிதி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் பரிந்துரையுடன், பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் குழுவுக்கு, அதிகாரிகளின் பெயர் பட்டியல் அனுப்பப்படும். அந்தக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X