'பிரியங்கா சோப்ரா வாழ்க' காங்., தலைவர் உளறல்

Added : டிச 02, 2019
Advertisement
 'பிரியங்கா சோப்ரா வாழ்க'  காங்., தலைவர் உளறல்

புதுடில்லி: டில்லியில், பொதுக்கூட்டமொன்றில், காங்., தலைவர், சுரேந்திர குமார், 'பிரியங்கா வாத்ரா வாழ்க' என்பதற்கு பதில், ஹிந்தி நடிகை, 'பிரியங்கா சோப்ரா வாழ்க' என, தவறாக கூறியதைக் கேட்டு, கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது.

டில்லி; பாவனா தொகுதி எம்.எல்.ஏ.,வாக, மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர், சுரேந்திரகுமார். நேற்று முன்தினம், டில்லியில் நடந்த காங்., பொதுக்கூட்டத்தில் பேசினார்.இறுதியில் அவர், 'சோனியா வாழ்க' என, உரக்க கோஷமிட்டார். கூடியிருந்த கூட்டமும் சேர்ந்து கோஷம் எழுப்பியது. அடுத்து, 'ராகுல் வாழ்க' எனக் கூறியவர், மூன்றாவதாக, 'பிரியங்கா சோப்ரா வாழ்க' என்றார்.இதைக் கேட்டதும், கூட்டத்தில் இருந்தவர்கள் திகைத்தனர். சில நொடிகளில், பலத்த சிரிப்பொலி எழுந்தது. அப்போதுதான், காங்., பொதுச் செயலர், பிரியங்கா வாத்ராவிற்கு பதில், தவறாக, நடிகை பிரியங்கா சோப்ராவை குறிப்பிட்டதை உணர்ந்தார், சுரேந்திர குமார். உடனே சுதாரித்துக் கொண்டு, மீண்டும் 'பிரியங்கா வாத்ரா வாழ்க' என கூற, கூட்டமும் திரும்பக் கூறியது. இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

இது குறித்து, அகாலி தள தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, மன்ஜின்தர் சிங் சிர்சா, 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், கிண்டல் செய்துள்ளார். அதில், ''காங்., கூட்டத்தில், பிரியங்கா சோப்ராவை வாழ்த்தியதில் இருந்து, ராகுல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்சியும், 'பப்பு' என, அதாவது, குழந்தைகள் என்பது தெளிவாகிறது,'' என, கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில், விவாதப்பொருளாகவும் வலம் வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X