இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு வலியுறுத்தல்

Added : டிச 02, 2019
Advertisement

புதுடில்லி: எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினரில், 'கிரீமி லேயர்' எனப்படும் உயர் வருவாய் பிரிவினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் பிரச்னை குறித்து, ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மத்திய அரசு வாதிட்டது.

எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அரசு பணிகளில், பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.கடந்த, 2006ம் ஆண்டு, நாகராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, 'இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என, தீர்ப்பு அளித்தது. ஆனால், 'ஏன் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதற்கான புள்ளி விபர ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டது.

கடந்த, 2018ல், ஜர்னாயில் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அமர்வும், இதை ஏற்றுக் கொண்டது.இந்த நிலையில், 'பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இதை விசாரிக்கிறது.

'பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கலாமா என்பது குறித்து, ஏழு நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.இது குறித்து ஆராய்வதாகக் கூறியுள்ள அமர்வு, வழக்கின் விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X