பொது செய்தி

தமிழ்நாடு

ரவி தமிழ்வாணன் வெளிநாடு சுற்றுப்பயணம்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : எழுத்தாளர் ரவி தமிழ்வாணன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, மூன்று வார வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

எழுத்தாளர் ரவி தமிழ்வாணன், இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று இரவு, சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். இயற்கை வைத்தியர் சுப்பிரமணியன், எழுத்தாளர் முகவை மேத்தா ஆகியோரும் சென்றுள்ளனர். இந்தோனேஷியா, பாண்டூங்கில், 7ம் தேதி, நடக்கும் மணிமேகலைப் பிரசுரத்தின், 15 நுால்கள் வெளியீட்டு விழா மற்றும் கண்காட்சி யில், இயற்கை மருத்துவர் சுப்பிரமணியனின், மருத்துவ சொற்பொழிவு; பேச்சாளர் முகவை மேத்தாவின், இலக்கிய சொற்பொழிவு நடைபெறும்.

வரும், 9ம் தேதி மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்கின்றனர். அங்கு, 10ம் தேதி, சென்னை தமிழ் சங்கம், மலேஷிய தமிழ் சங்கம் இணைந்து நடத்தும், கலை பண்பாடு பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். அடுத்ததாக, 11ம் தேதி மாலை, இலங்கை கலாசார சங்கத்தில் நடக்கும், பாரதியார் உலகளாவிய மாநாடு மற்றும் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கின்றனர். அங்கு மணிமேகலைப் பிரசுரத்தின், 'பாரதியார் கவிதைகள்' உள்ளிட்ட நுால்களின் விற்பனை கண்காட்சி நடைபெறும்.

அடுத்த நாள், கடாரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழன் பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். சிங்கப்பூரில், 15ம் தேதி, பாரதியார் பிறந்த நாள், ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி நடக்கும், 'பாரதியார் கவிதைகள், ரஜினிகாந்த் எனும் காந்தம்' நுால்களின் சிறப்பு விற்பனை கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X