பொது செய்தி

தமிழ்நாடு

சிவாலயங்களில் சங்காபிஷேகம்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : சென்னை, புறநகரில் உள்ள சிவாலயங்களில், நேற்று சங்காபிஷேகம் நடந்தது.

கார்த்திகை மாதம், சோமவாரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து, வடபழநி ஆண்டவர் கோவிலில் அருள்பாலிக்கும் சொக்கநாதருக்கு, கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று மாலை, 4:30 மணிக்கு, 108 வலம்புரி சங்கினால், அபிஷேகம் செய்யப்பட்டது.அதேபோல, பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், சிவபெருமானை தரிசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X