புல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா?: உத்தவ் தாக்கரே

Updated : டிச 04, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (7)
Advertisement
மஹாராஷ்டிரா, சிவசேனா, தாக்கரே, புல்லட் ரயில், நிறைவேறுமா, மறு ஆய்வு, நிதி நெருக்கடி

மும்பை: ''ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம் உட்பட, மஹாராஷ்டிராவில் தற்போது செயல்படுத்தப் படும் அனைத்து திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, நேற்று அளித்த பேட்டி:சிவசேனா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அரசு, சாமானிய மக்களுக்கானது; வசதி படைத்தவர்களுக்கானது அல்ல. மும்பை - ஆமதாபாத் இடையே அமையவுள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா என கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில், ஆரோ மெட்ரோ ரயில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது போன்ற முடிவை எடுக்க முடியாது.

ஆனால், புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மறு ஆய்வு செய்யப்படும். அந்த திட்டம் மட்டுமல்ல; மஹாராஷ்டிராவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும். மாநில அரசு, தற்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

ஆனாலும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதில் உறுதியாக உள்ளோம். மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - NAVI MUMBAI,இந்தியா
03-டிச-201912:53:59 IST Report Abuse
srinivasan பேரு விகாஸ் agadi அனா வந்தோன்ன புல்லட் ட்ரெயின் நிறுத்தியாச்சு. மெட்ரோ நிறுத்தியாச்சு. nanar ரெபினேரி உடம்பில போட்டாச்சு. என்ன வளர்ச்சி. பேசாமே பெற மாத்துங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
03-டிச-201911:03:14 IST Report Abuse
தோலுரிப்பவன் தற்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. என்னமோ பிஜேபி ஆட்சி செய்து இவ்வளவு கடனை சூப்பர் இதில் திராவிடத்தை பற்றி ஒரு மூதேவி பேசுது திராவிடம் இல்லாம ஆட்சி மாநிலங்கள் எல்லாம் எங்கே முன்னேறிவிட்டன இதற்க்கு திராவிடர்கள் ஆண்ட தமிழகம் எங்கேயோ உள்ளதே எல்லா வசதிகளும் இங்கே உள்ளன என் குஜராத்தை விட திராவிடர்கள் ஆண்ட தமிழகம் டாப் தானே எனவே அவர்களும் இனி திராவிடத்தை follow பண்ண சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-டிச-201909:31:23 IST Report Abuse
ஆரூர் ரங் மறு ஆய்வுன்னா கட்டிங் கொடுத்தால் தொடரலாம் என அர்த்தம் .மூணு கட்சிக்கும் வேணுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X