தற்கொலை, பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை, பலி

Added : டிச 02, 2019

கிணற்றில் மூழ்கி சிறுமி பலி

சேலையூர்: சேலையூர் அடுத்த அகரம் தென், குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர், வெங்கடேசன், 45; கட்டட தொழிலாளி. இவரது மகள் நந்தினி, 16. நேற்று தன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில், தோழியருடன் துணி துவைக்க சென்றார். துணி துவைத்த பின், கிணற்றில் குளித்தார். அப்போது, நீச்சல் தெரியாததால், மூழ்க துவங்கிய நந்தினி கூச்சலிட்டார். அவரது, சத்தம் கேட்டு, உடன் சென்ற தோழியர் காப்பாற்ற முயன்றனர். ஆனால், நீரில் மூழ்கி இறந்தார். சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வெவ்வேறு தற்கொலை சம்பவங்கள்

குன்றத்துார்: குன்றத்துாரை அடுத்த மணஞ்சேரி, விஜயலட்சுமி அவென்யூவைச் சேர்ந்தவர் உதயகுமார், 31; கார் மெக்கானிக். இவர், அமுதா, 26, என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்தார். குடும்ப பிரச்னை காரணமாக, மாங்காடு, சரஸ்வதி நகரில் மனைவியுடன் வசித்தார். நேற்று முன்தினம், குன்றத்துாரில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற உதயகுமார், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேடவாக்கம்: சித்தாலப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ராஜா, 34; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி, உடல்நலக் குறைவால், எட்டு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட ராஜா, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

தரமணி: சீர்காழியைச் சேர்ந்தவர் சுங்க பத்மினி, 25. தரமணி, பீலி அம்மன் கோவில் தெருவில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று, விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். போலீசாரின் விசாரணையில், உடல் உபாதையால் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X