பிரியங்கா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாகனம்

Added : டிச 02, 2019
Advertisement

புதுடில்லி: காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவின் டில்லி வீட்டிற்குள், சிலர் அத்துமீறி நுழைந்ததாகவும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில், குறைபாடு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை, மத்திய அரசு, சமீபத்தில் வாபஸ் பெற்றது.இதையடுத்து, காங்., இடைக்கால தலைவர் சோனியா, லோக்சபா எம்.பி., ராகுல் மற்றும்அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோருக்கு, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்களின், 'இஸட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், டில்லி, லோதி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பிரியங்காவின் வீட்டுக்குள், கடந்த மாதம், 25ல், அடையாளம் தெரியாத கார் ஒன்று, அத்துமீறி நுழைந்ததாகவும், அதில் வந்த ஐந்து பேர், பிரியங்காவுடன், 'செல்பி' எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்ததாகவும், ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.இதையடுத்து, பிரியங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில், குறைபாடு இருப்பதாக, காங்., தரப்பில் இருந்து, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X