நித்யானந்தா ஆசிரமம் மூடல் குஜராத் நிர்வாகம் அதிரடி

Added : டிச 02, 2019
Advertisement
 நித்யானந்தா ஆசிரமம் மூடல் குஜராத் நிர்வாகம் அதிரடி

ஆமதாபாத்: குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள நித்யானந்தா ஆசிரமம் மீது, தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, ஆசிரமத்தை மூடி, மாவட்ட நிர்வாகம், 'சீல்' வைத்தது.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள, ஹீராபூர் என்ற இடத்தில், நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த, தன் இரண்டு மகள்கள், லோபமுத்ரா சர்மா, 21, நந்திதா சர்மா, 18, ஆகியோரை மீட்டுத் தரக்கோரி, குஜராத் உயர் நீதிமன்றததில், ஜனார்த்தன சர்மா என்பவர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் நித்யானந்தா மீது பாலியல் புகாரும் அளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'காணாமல் போன இளம்பெண்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளித்து, டிசம்பர், 10ல் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்' எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டம், ஹீராபூரில் உள்ள, 'டில்லி பப்ளிக்' பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமம் நேற்று மூடப்பட்டது. ஆமதாபாத் மாவட்ட கலெக்டர் உத்தரவுப் படி, அதிகாரிகள் ஆசிரமத்திற்கு வந்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றி, 'சீல்' வைத்தனர். ஆசிரமம் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நித்யானந்தா ஆசிரமம் நடத்த, பள்ளி வளாகத்தில் அனுமதி அளித்த டில்லி பப்ளிக் பள்ளியின் அங்கீகாரத்தை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், ரத்து செய்தது.

இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல், நித்யானந்தா ஆசிரமம் நடத்த அனுமதி வழங்கிய பள்ளி நிர்வாகத்தின் மீது, மாநில அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். பள்ளி முன் திரண்டு, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, 'அப்பள்ளியை சேர்ந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அடுத்த ஆண்டு பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும், ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு, அருகில் உள்ள வேறொரு பள்ளியில், கல்வியை தொடர, அனுமதி வழங்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X