ரூ.40 ஆயிரம் கோடி என்னாச்சு! : பா.ஜ., - எம்.பி., 'சேம் சைடு கோல்'

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மும்பை: 'மஹாராஷ்டிரா அரசின், 40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவே, தேவேந்திர பட்னவிஸ் முதல்வரானார்' என, கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே பகீர் குற்றச்சாட்டை கூறினார். இதை பட்னவிஸ் மறுத்துள்ளார்.

அதே நேரத்தில், சிவசேனா, தேசியவாத காங்., கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த அரசியல் குழப்பத்துக்கு இடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ், முதல்வராக பதவியேற்றார். ஆனால், நான்கு நாள்களில் பதவி விலக நேரிட்டது.

இந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே, திடீரென ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:மஹாராஷ்டிராவில், சமீபத்தில், 80 மணி நேரத்துக்கு மட்டுமே ஒருவர் முதல்வராக இருந்துள்ளார். ஏன் இந்த நாடகம் நடந்தது. சர்ச்சைதனக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெரிந்தும், அவர் முதல்வராக ஏன் பதவியேற்றார். இது அனைத்து மக்களுக்கும் எழுந்துள்ள கேள்வி.புல்லட் ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான, 40 ஆயிரம் கோடி ரூபாய், தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காக, அவற்றை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்காகவே, இந்த நாடகம் நடந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதை மறுத்து, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளதாவது:ஹெக்டே கூறுவது முற்றிலும் பொய். அவ்வாறு ஒன்று நடக்கவே இல்லை. அவர் கூறியதை முழுமையாக மறுக்கிறேன். புல்லட் ரயில் திட்டத்தை, மத்திய அரசின் ஒரு நிறுவனம் செயல்படுத்துகிறது. அதற்கான நில ஆர்ஜிதம் மட்டுமே மாநில அரசு செய்கிறது. இந்த திட்டம் உட்பட எந்த ஒரு திட்டத்துக்கான நிதியையும் திருப்பி அனுப்பும்படி, மத்திய அரசு கேட்கவில்லை. அவ்வாறு எந்த நிதியையும் திருப்பி அனுப்பவில்லை.நான் முதல்வராக இருந்தபோதும், காபந்து முதல்வராக இருந்தபோதும், அவ்வாறு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. விளக்கம் கேட்புதிட்டங்களுக்கான நிதி தொடர்பான கணக்குகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிந்த எவருக்கும், இவ்வாறு நிதியை திருப்பி அனுப்ப முடியாது என்பது தெரியும்.இந்தப் பிரச்னை குறித்து, மாநில நிதித் துறை விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

''மாநில அரசு, 40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அனுப்புவது சாத்தியமில்லாதது. ஆனால், ஹெக்டே கூறியது உண்மையாக இருந்தால், அதற்கு பொறுப்பேற்று, பிரதமர் பதவியில் இருந்த மோடி விலக வேண்டும்,'' என, தேசியவாத காங்., செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.''மஹாராஷ்டிராவுக்கு பட்னவிஸ் துரோகம் இழைத்துள்ளார். அவர் உட்பட மஹாராஷ்டிர பா.ஜ.,வினர் கிரிமினல்கள். இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைச் செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என, சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-டிச-201900:16:48 IST Report Abuse
தமிழ்வேல் இவருமட்டுமா, உபி ல ஒரு mla அங்கே உள்ள பாஜக ஊழல் வாதிகளை போட்டுக்கொடுத்து, பாஜக நோட்டீசு அனுப்பி உள்ளது. நம்ம, தமிழ் நாட்டில சின்னத்தாத்தாதான் அடுத்த முதல்வர்னு ஒரு பாஜக சொல்லி நோடீஸுக்கு காத்துகிட்டு இருக்காரு. கட்சியில இருக்கிற கசப்பைக் காட்டுகின்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X