சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

Added : டிச 02, 2019
Advertisement

புதுடில்லி: சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை, உயர் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு, பொன் மாணிக்கவேலுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தமிழக அரசு மீது, அவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க, இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டது. நீடிக்க கூடாதுஆனால், தமிழக அரசு தன்னை விடுவிக்க முடியாது என்றும், ஆவணங்களை ஒப்படைக்க முடியாது எனவும், பொன் மாணிக்கவேல் கூறினார்.

இந்நிலையில், பொன் மாணிக்கவேலின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரஸ்தோகி ஆஜரானார்.அவர் கூறியதாவது:பணி ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியின் பதவியை, அசாதாரண சூழலில் தான் நீட்டிக்க முடியும்.

இந்த வழக்கில், அவ்வாறான சூழல் இல்லை.எனவே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக, பொன் மாணிக்கவேல் நீடிக்கக் கூடாது. வேறொரு அதிகாரியை, தமிழக அரசு நியமிக்கும்.அவமதிப்பு வழக்குபொன் மாணிக்கவேல் பதவியில் இருந்தபோது, அவர் நடத்திய விசாரணை தொடர்பான எந்தவொரு அறிக்கையையும், உயர் அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பிக்கவில்லை. மின்னஞ்சல் மூலம், தகவல்களை மட்டுமே அளித்துள்ளார்.இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய அனைத்து அதிகாரிகள் மீதும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

'தமிழக அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன' என, நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, பொன் மாணிக்கவேல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொன் மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க, இடைக்கால தடை விதித்தனர்.மேலும், சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், தன் உயர் அதிகாரியிடம், பொன் மாணிக்கவேல் முறைப்படி சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.'பதவி நீட்டிப்பு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X