பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களை வெட்டாமல் கட்டடம்; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : சென்னை, எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை வளாகத்தில், மரங்கள் இல்லாத இடத்தில் கட்டடம் கட்டுவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எழும்பூரைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனு:அரசு கண் மருத்துவமனையை விரிவுபடுத்தி, கூடுதல் கட்டடங்கள் கட்ட, ௭௫ மரங்களை வெட்டுவதற்கு, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தடை விதிப்பு

இந்த மரங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மருத்துவமனை விரிவாக்கம் அவசியம் என்றாலும், மரங்களும் அவசியம் தான்.நன்றாக வளர்ந்துள்ள மரங்களை வெட்டாமல், வளாகத்தில் உள்ள காலியிடத்தில், கட்டடங்கள் கட்டலாம். இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனருக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 'நீதிமன்ற அனுமதியின்றி, மரங்களை வெட்டக் கூடாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மரங்களை வெட்டாமல் கட்டடம் கட்டலாமா; அதே வளாகத்தில் மரங்களை இடமாற்றம் செய்யலாமா என்பதற்கு, அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

சாத்தியக்கூறு

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மரங்களை இடமாற்றம் செய்வதற்கு பதில், பெரிய அளவிலான மரங்கள் இல்லாத இடத்தில், விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம்' என்றார்.இந்த திட்டத்தை பரிசீலிக்கவும், மரங்கள் இல்லாத இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்த அறிக்கையை, நாளை தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின் போது, 'கட்டடங்கள் கட்டுவதை, நாங்கள் எதிர்க்கவில்லை; அதே நேரத்தில் மரங்களை அழிக்கக் கூடாது; சென்னையின் இதயம் போன்ற இந்த இடத்தில், மரங்கள் அதிகம் உள்ளன.'பசுமையான மரங்கள் காக்கப்பட வேண்டும்; டில்லியைப் போல், சென்னையும் மாசுபட்டு விடக்கூடாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X