சிக்னல் கோளாறு ரயில்கள் தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சிக்னல்' கோளாறு ரயில்கள் தாமதம்

Added : டிச 02, 2019

அம்பத்துார் : மழை காரணமாக, சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயங்கின.

சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில், நேற்று முன்தினம் முதல், பலத்த மழை நீடித்து வருகிறது.இதனால், சென்னை - அரக்கோணம் இடையே ரயில் பாதைகளில், மழைநீர் தேங்கி, ஆங்காங்கே, 'சிக்னல்' கோளாறு ஏற்பட்டது.இதனால், நேற்று காலை, 6:30 மணி முதல், 7:30 மணி வரை, அம்பத்துார், ஆவடி, திருமுல்லைவாயல் ரயில் நிலையங்களுக்கு அருகே, விரைவு ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.சிக்னல் கோளாறு சீரான பின் காலை, 8:00 மணி முதல் ரயில்கள் இயங்கின. இதனால், குறித்த நேரத்தில், குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல், பயணியர் அவதிப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X