சென்னை : 'பேரிடர் கால மீட்பு பணிக்காக, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், கட்டுப்பாட்டு மையத்திற்கு, மக்கள் தொடர்பு கொள்ளலாம்' என, கலெக்டர் சீதாலட்சுமி அறிவுறுத்தி உள்ளார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சென்னை மாவட்டத்தில், மாநகராட்சி, வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, மழையால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் சேதம் தொடர்பாக, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு, 1077, 1070 என்ற எண்களில், 24 மணி நேரமும், மக்கள் புகார் அளிக்கலாம்.
அதேபோல், கட்டடங்கள், மின் கம்பிகள் மற்றும் மரங்கள் விழும் நிலையில் இருந்தாலோ, மழைநீர் தேங்கியிருந்தாலோ, இந்த எண்ணிற்கு தெரிவிக்கலாம் என, கலெக்டர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.