சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லையால் விபரீதம்

Added : டிச 02, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 கடன் தொல்லையால் விபரீதம்

திருச்செங்கோடு: கடன் தொல்லையால், திருச்செங்கோடு அருகே, மனைவி, மகளுடன், 'ரிக்' உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, சாயக்காட்டைச் சேர்ந்தவர், மோகன், 55; 'ரிக்' உரிமையாளர் மற்றும் விவசாயி. மனைவி நிர்மலா, 47. மகன் நவீன்குமார், 25. தந்தைக்கு உதவியாக இருந்தார். மகள் சவுமியா, 17, சட்டக் கல்லுாரி மாணவி.சில நாட்களுக்கு முன், நவீன்குமார், தொழில் விஷயமாக வெளியூர் சென்றார். நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், மோகனின் தம்பிக்கு, சவுமியா போன் செய்து, மூவரும் விஷ மாத்திரையை விழுங்கி விட்டதாக கூறியுள்ளார்.

அவர் பதறியடித்து வந்தார். அங்கு, நிர்மலா இறந்திருந்தார். மற்ற இருவரும், உயிருக்கு போராடினர். அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியில், மோகன் இறந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி, சவுமியா உயிரிழந்தார்.வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரித்தனர்.

அவர்கள் கூறுகையில், 'ரிக் உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் தொடர் நஷ்டம் ஏற்படவே, மோகன் கடனில் இருந்து உள்ளார். 'இதனால், மனமுடைந்தவர், மனைவி, மகளோடு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். வேறு காரணம் உள்ளதா எனவும் விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-டிச-201904:02:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் திவால் சட்டம் எல்லாம் பல்லாயிரம் கோடி வாங்கி கடன் வாங்கி நாமம் போட்ட காவி கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டும் தான். இவர் போன்ற நடு, சிறு சொந்த தொழில் முனைவோருக்கு கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
atara - Pune,இந்தியா
03-டிச-201921:40:33 IST Report Abuse
atara This all planned task not to repay loan , A Investor of company should know limits of லோன் அண்ட் credits to offer.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
03-டிச-201919:24:15 IST Report Abuse
Sridhar Rengarajan கொடுமை, கடன் தொல்லையால் கணவன் மனைவி மகன் மகள் என்ற ஒரு அழகான குடும்பம் இன்று சிதைந்துவிட்டது. என்ன செய்ய கடனை வாங்கிவிட்டு லண்டனுக்கு ஓட இந்த மனிதர் மல்லையாவா, நீரவ் மோடியா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X