கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிர்மலாதேவி ஜாமின் மனு

Added : டிச 02, 2019
Advertisement
 நிர்மலாதேவி ஜாமின் மனு

ஸ்ரீவில்லிபுத்துார்: பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் மனு மீதான விசாரணையை, டிச., 5க்கு ஒத்தி வைத்து, ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்லுாரி மாணவியர் சிலரிடம், அலைபேசியில் தவறாக பேசியதாக, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீது வழக்கு பதிவானது.மேலும், மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சித் துறை மாணவர் கருப்பசாமி மீதும் வழக்கு பதியப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மூவரும் ஆஜராகினர். நிர்மலாதேவியின் ஜாமின் மனு, பத்திரிகை மற்றும், 'டிவி'க்களில் செய்தி வெளியிட தடை, மூடிய அறையில் விசாரணை ஆகியவை குறித்து, வழக்கறிஞர்கள் வாதங்களை எடுத்துரைத்தனர்.ஜாமின் மனு மீதான விசாரணையை, வரும், 5ம் தேதிக்கும், வழக்கின் விசாரணையை, வரும், 13ம் தேதிக்கும் ஒத்தி வைத்து, நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறுகையில், ''இந்த வழக்கு, மீடியாவில் வெளியான ஆடியோவால் வந்தது. இதனால், மக்கள் இதை உற்றுநோக்குகின்றனர். ''இந்நிலையில், மூடிய அறையில் விசாரணை என்பது, மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தும். செய்திகள் வெளி வருவதை தடுக்கக்கூடாது என மனு செய்துள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X