குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வெள்ளம்

Added : டிச 02, 2019
Advertisement
 குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வெள்ளம்

குரோம்பேட்டை : குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால், பிரசவ வார்டு, வெளி நோயாளிகள் மற்றும் 'டயாலிசிஸ்' பிரிவுகள் பாதிக்கப்பட்டன.

தென் சென்னையில் உள்ள, ஒரே அரசு மருத்துவமனையாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளது.இங்கு, 30 கி.மீ., சுற்றளவில் இருந்து, நாள்தோறும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, பிரசவம் அதிகமாக நடக்கிறது. விபத்தில் சிக்கி, காயம் அடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். மருத்துவமனை கட்டடம், பல ஆண்டுகள் பழமையானது என்பதால், சாலையை விட, தாழ்வாக உள்ளது.

இதனால், லேசான மழை பெய்தாலே, கட்டடத்திற்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. தற்போதைய தொடர் மழையால், நேற்று கீழ்தளத்தில், முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கியது.பிரசவ வார்டு, டயாலிசிஸ் பிரிவு, ஆய்வகம், புற நோயாளிகள் பிரிவு ஆகிய இடங்களில் வெள்ளம் தேங்கியதால், நோயாளிகள்அவதிப்பட்டனர். இதையடுத்து, பிரசவ வார்டு, முதல் மாடிக்கு மாற்றப்பட்டது.

டயாலிசிஸ் பிரிவு இயங்கவில்லை. அவசர சிகிச்சை பிரிவுக்கு, புற நோயாளிகள் பிரிவு மாற்றப்பட்டது. ஆய்வகத்தில் இருந்த மருந்துகள் நாசமாகின. மழைநீரை வெளியேற்றும்பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மோட்டார் மூலம், தண்ணீரை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X