சம்பவம் செய்தி

தமிழ்நாடு

290 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை மாவட்டத்தில், இந்தாண்டில், குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டு இருந்த, 290 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற, தமிழக அரசு பல்வேறு செயல் திட்டங்களை தீட்டி, நடவடிக்கை எடுத்து வருகிறது.அதேபோல், மாவட்டந்தோறும் கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர்களை அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. சென்னையில், குழந்தைகள் தொழிலாளர்களை மீட்க, கலெக்டர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு செயல்படுகிறது. இந்தாண்டில் இதுவரை, 290 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் கூறியதாவது:சென்னையில், சோழிங்கநல்லுார், திருவொற்றியூர் உட்பட ஏழு இடங்களில், பல்வேறு தொழில் நிறுவனங்களில், ஆய்வு நடத்தி உள்ளோம். ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, 6 வயது முதல், 18 வயது உள்ள, 50 பெண் குழந்தைகள் உட்பட, மொத்தம், 290 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்இவர்கள் அதிகப்படியாக, வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை சொந்த ஊர்களுக்கே அனுப்பி வைத்துள்ளோம்.பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X