சென்னை : மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் சீதாலட்சுமி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 154 மனுக்கள் பெறப்பட்டன.
வாரம்தொறும் திங்கட்கிழமை நடக்கும், இந்த கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளுக்காக, 500க்கும் மேற்பட்டோர், மனு அளிக்கவும், மனுவின் நிலையை குறித்தும் தெரிந்துக் கொள்ளவும், மக்கள் கூட்டம் அலைமோதும்.பருவமழை பெய்து வருவதால், நேற்றைய கூட்டத்திற்கு, பொதுமக்கள் அதிகளவில் வரவில்லை.இந்நிலையில், பரபரப்பாக காணப்படும், சென்னை கலெக்டர் அலுவலகம், மழை காரணமாக, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.