பொது செய்தி

தமிழ்நாடு

ஜார்ஜ் டவுன், அகரம் தென் மேம்பாட்டுக்கு ரூ.2 கோடி

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை ஜார்ஜ் டவுன், தாம்பரம், அகரம் தென் பகுதிகளில், நகரமைப்பு ரீதியான மேம்பாட்டு திட்டங்களை உருவாக்க, 2 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணையாக, 40 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 25 நகரங்களில், நகரமைப்பு ரீதியிலான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னையில், ஜார்ஜ் டவுன், தாம்பரத்தை அடுத்த அகரம் தென் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதன்படி, ஜார்ஜ் டவுனில், 370 ஏக்கரும், அகரம் தென் பகுதியில், 371 ஏக்கரும் நகரமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கான வரைவு திட்டங்களை, சி.எம்.டி.ஏ., தயாரித்தது.

இத்திட்டங்களை செயல்படுத்த, 2 கோடி ரூபாய் வழங்க, மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்து உள்ளது. இதில், முதல் தவணையாக, 40 லட்சம் ரூபாயை, மத்திய அரசு விடுவித்து உள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கலந்தாலோசனை அமைப்பான தமிழ்நாடு நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான, 'டுபிட்கோ'வுக்கு சென்றுள்ளது.

டுபிட்கோவிடம் இருந்து இந்நிதியை, இத்திட்ட செயல்பாட்டு அமைப்பான, சி.எம்.டி.ஏ., பெயருக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க, நகராட்சி நிர்வாக துறைக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.மத்திய அரசிடம் இருந்து வந்த நிதியை, நிர்வாக குழப்பம் காரணமாக, சம்பந்தப்பட்ட துறை பயன்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X