உயரம் குறைவான மணமக்கள் திருமணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயரம் குறைவான மணமக்கள் திருமணம்

Added : டிச 02, 2019 | கருத்துகள் (7)
 உயரம் குறைவான மணமக்கள் திருமணம்

பரங்கிப்பேட்டை: உயரம் குறைவான மணமக்களுக்கு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 28; உயரம் குறைவான வாலிபர். பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் செய்ய நினைத்த பெற்றோர், சில ஆண்டுகளாக பெண் தேடியும், கிடைக்கவில்லை. திருமண தகவல் மையம் மூலம், பெண் தேடினர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், மொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகள் கலைச்செல்வி, 26, ஜெயபிரகாஷின் உயரத்திற்கு ஏற்றபடி இருந்ததால், இரு குடும்பத்தினரும் பேசி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.ஜெயபிரகாஷ் - கலைச்செல்வி திருமணம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் புற்றுமாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X