சேலம்: மதுரை, அழகர் கோவில் பெண் யானை ஆண்டாள், 68. வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால், 2009 முதல் சேலம், ஏற்காடு அடிவாரத்தில், வனத்துறைக்கு சொந்தமான உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.பொள்ளாச்சியைச் சேர்ந்த பாகன் காளியப்பன், 45, பூங்காவில் தங்கி, யானையை பராமரித்து வந்தார். நேற்று மாலை, 5:45 மணியளவில் ஓசூர் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ், ஆண்டாளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.அப்போது, மதம் பிடித்த யானை, தும்பிக்கையால், மருத்துவரை தாக்கியது. சுதாரித்த பாகன், யானை பிடியில் இருந்து மருத்துவரை விடுவித்துள்ளார். அப்போது, யானை கால்களுக்கு இடையில், சிக்கி காளியப்பன் பலியானார்.