உயருது பெரியாறு நீர்மட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயருது பெரியாறு நீர்மட்டம்

Added : டிச 02, 2019

கூடலுார்: மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.கடந்த 4 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வினாடிக்கு 1854 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதிகளான முல்லைக்கொடி, தானிக்கொடி உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக 2962 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 127.70 அடியில் இருந்து 128.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 1400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்இருப்பு 4352 மில்லியன் கன அடியாகும். பெரியாறு, தேக்கடியில் மழை நேற்று பதிவாகவில்லை. எனினும் அணையின் மற்ற நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.வைகை அணை நீர்மட்டம் 64.53 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 2962 கன அடியாகவும், நீர்திறப்பு 360 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 4528 மில்லியன் கன அடியாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X