பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் 'டிபாசிட்' கட்டணம் விபரம்

Added : டிச 03, 2019
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான 'டிபாசிட்' கட்டண விபரம்;

பொதுப் பிரிவினர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 200 ரூபாய்; ஊராட்சி தலைவர் பதவிக்கு 600; ஒன்றிய கவுன்சிலர் 600; மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 1000 ரூபாய் டிபாசிட் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினருக்கு 50 சதவீத சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர் 9000 ரூபாய்; ஊராட்சி தலைவர் வேட்பாளர் 34 ஆயிரம் ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் 85 ஆயிரம்; மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் 1.70 லட்சம் ரூபாய் மட்டுமே தேர்தலில் செலவு செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் கணக்கு விபரங்களை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்க தவறுபவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

பார்வையாளர்கள் நியமனம்மாவட்ட கவுன்சிலரை தேர்வு செய்ய மஞ்சள் நிறம்; ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை நிறம்; ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு; ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

முதற்கட்ட தேர்தலில் 31 ஆயிரத்து 698 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இரண்டாம் கட்டமாக 32 ஆயிரத்து 92 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் 114 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மற்ற இடங்களில் 2.33 லட்சம் ஓட்டுப்பெட்டிகள் பயன் படுத்தப்பட உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பார்வையாளர்களாக தற்போது பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 870 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்; 16 ஆயிரத்து 840 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மட்டுமின்றி ஒரு ஓட்டுச்சாவடிக்கு 8 தேர்தல் அலுவலர்கள் என 5.18 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் குளறுபடி* முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்; 6251 ஊராட்சி தலைவர் பதவிகள்; 49 ஆயிரத்து 638 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு டிச. 27ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது

* இரண்டாம் கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்; 6273 ஊராட்சி தலைவர் பதவிகள்; 49 ஆயிரத்து 686 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு டிச. 30ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது

* மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு முதற்கட்டமாக எத்தனை இடங்களிலும் இரண்டாம் கட்டமாக எத்தனை இடங்களிலும் தேர்தல் நடக்கிறது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இதனால் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது* எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாகவும் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்ற பட்டியலும் வெளியிடப்படவில்லை.'மனு தாக்கல் துவங்க 6ம் தேதி வரை அவகாசம் உள்ளதால் அதற்குள் இந்த விவரங்கள் வெளியிடப்படும்' என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X