செய்திகள் சில வரிகளில்

Added : டிச 03, 2019
Advertisement

சாலை விபத்தில் 2 இந்திய மாணவர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்திய மாணவர்கள் பலியாயினர். இந்தியாவைச் சேர்ந்த ஜூடி ஸ்டான்லி 23 வைபவ் கோபிசெட்டி 26 டென்னசி பல்கலையின் வேளாண் கல்லூரியில் உணவு அறிவியல் படிப்பு படித்து வந்தனர். காரில் சென்றபோது வாகனங்களை மீட்கும் வாகனம் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர்.

தள்ளுமுள்ளுவில் 9 பேர் பலி
ரியோ டி ஜெனிரோ : தென் அமெரிக்க நாடான பிரேசிலில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 'பைக்'கில் வந்த இருவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றனர். துப்பாக்கியால் சுட்டபடியும் கற்களை வீசியும் அவர்கள் தப்பினர். அப்போது அந்தப் பகுதியில் நடந்த சாலை திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்துக்குள் புகுந்து அந்த இருவரும் தப்பினர். போலீசார் துரத்தியதால் பதற்றமடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றனர். அதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

விமான தாக்குதலில் 10 பேர் பலி
பெய்ரூட்: மத்தியக் கிழக்கு நாடான சிரியாவின் இட்லிப் பகுதி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்பதற்காக அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அரசு படைகள் நடத்திய விமான தாக்குதலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் படையினர் 3 பேர் பலி
நைஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சின் தென் பகுதியில் பலத்த மழையால் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதற்காக அனுப்பப்பட்ட மீட்புப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மீட்புப் படையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

புலனாய்வு அதிகாரிகள் பலி
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ் தானில் புலனாய்வு அதிகாரிகள் சென்ற வாகனத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்தனர்; மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தீ விபத்தில் 13 பேர் பலி
அம்மான்: மத்தியக் கிழக்கு நாடான ஜோர்டானின் தெற்கு ஷோனா பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் பாக்.கைச் சேர்ந்த எட்டு குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பாக்.கைச் சேர்ந்தவர்கள் இங்கு விவசாய கூலியாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X