இலங்கை அதிபருடன் பாக்., அமைச்சர் சந்திப்பு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கொழும்பு: இலங்கை வந்துள்ள பாக். வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி இங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேயுடன் இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார்.அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றார்.

சமீபத்தில் இந்தியா வந்த அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி நேற்று இலங்கை வந்தார். கொழும்பில் அதிபர் கோத்தபயாவை சந்தித்த அவர் இரு தரப்பு உறவு வர்த்தகம் முதலீடு இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவை குறித்து பேச்சு நடத்தினார். அப்போது கோத்தபயாவை பாகிஸ்தானுக்கு வரும்படி தங்கள் நாட்டு அதிபர் ஆரீப் ஆல்வி கொடுத்த அழைப்புக் கடிதத்தையும் ஷா முகமது குரேஷி வழங்கினார்.

முன்னதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேயையும் ஷா முகமது சந்தித்து பேசினார். அப்போது ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அவரிடம் ஷா முகமது முறையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
03-டிச-201918:40:46 IST Report Abuse
Nalam Virumbi இன்னாதான ஒப்பாரி வச்சாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X