சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இ.பி.எஸ்.,சுக்கு கொஞ்சம் ஞாபக மறதிங்க!'

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
'இ.பி.எஸ்.,சுக்கு கொஞ்சம் ஞாபக மறதிங்க!'

வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதியில் கட்டப்பட்டுள்ள, காட்பாடி - வள்ளிமலை ரோடு பேருந்து நிறுத்தம் மற்றும் அசோக் நகரில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. இதை, காட்பாடி தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ., துரைமுருகன் திறந்து வைத்தார்.

அப்போது அவரிடம், 'மாவட்டங்களை பிரிப்பதால், எந்த பயனும் இல்லை என, நீங்கள் சொன்னதாக, முதல்வர் இ.பி.எஸ்., கூறுகிறாரே' என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, துரைமுருகன், 'முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு கொஞ்சம் ஞாபக மறதி. திருப்பத்துாரைக் கூட திருப்பூர் என்று கூறுகிறார். வேறு யாரோ சொன்னதை, நான் சொன்னதாக கூறுகிறார்' என்றார். 'உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?' என்ற கேள்விக்கு, 'அ.தி.மு.க.,வினர் தான், உள்ளாட்சி தேர்தல் வரும் என்று கூறுகின்றனர். அது நடக்கட்டும்... பார்க்கலாம்!' என்று கூறினார்.

மூத்த நிருபர் ஒருவர், 'உள்ளாட்சி தேர்தல் வேண்டாம்ங்கிற தொனியில இவர் பேசுறாரே... அப்ப, 'உள்ளாட்சி தேர்தலை நிறுத்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்யிறார்'ன்னு, அ.தி.மு.க., ஜெயகுமார் சொன்னது சரியா தான் போச்சு...' எனக் கூறிச் சிரிக்க, சக பத்திரிகையாளர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-டிச-201911:40:48 IST Report Abuse
D.Ambujavalli எது எப்படியோ, இரு கட்சிகளும் ‘ஒற்றுமையாக’ இருந்து உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் செய்வதில் குறியாக இருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X