புதுடில்லி:'இ - சிகரெட்' எனப்படும், மின் சிகரெட்டை தயாரிக்க, விற்பனை செய்ய, சேகரித்து வைக்க, விளம்பரம் செய்ய தடை விதிக்கும் சட்ட திருத்தத்தை கடந்த செப்டம்பரில், மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கான மசோதா, லோக்சபாவில், சமீபத்தில் நிறைவேறியது. இந்நிலையில், ராஜ்யசபாவில் இம்மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம், நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
Advertisement