சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எடியூரப்பாவுக்கு அழகா இது?

Added : டிச 03, 2019
Advertisement
 எடியூரப்பாவுக்கு அழகா இது?

'அரசியலில் பழுத்த அனுபவம் உள்ள இவரே இப்படி பேசலாமா...' என, கர்நாடகா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவை பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், அந்த மாநில அரசியல் கட்சியினர்.

கர்நாடகாவில் விரைவில், 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில், எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். முதல்வர் எடியூரப்பாவுக்கோ, இது கவுரவ பிரச்னை. இந்த, 15 தொகுதிகளிலும், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர், காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து வெற்றி பெற்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள். இதனால், 'துரோகிகளுக்கு பாடம் புகட்டுங்கள்' என, காங்., மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் செய்யும் பிரசாரம், வாக்காளர்களிடம் நன்றாகவே எடுபடுகிறது.

இதைச் சமாளிக்க, ஜாதி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார், எடியூரப்பா. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களின் ஜாதியை மையப்படுத்தி, பிரசாரம் செய்வதுடன், அந்த ஜாதி பெருமைகளையும் குறிப்பிட்டு பேசுகிறார். இதில் கடுப்பான எதிர்க்கட்சியினர், 'அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்காமல், இது போல் ஜாதியை குறிப்பிட்டு பேசுவது, மூத்த தலைவருக்கு அழகா... இது பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப் போகிறோம்' என, கடுப்புடன் பேசுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X