சினிமாவில் வாய்ப்பு தேடியே போதையில் தொலைந்தவர்கள்

Updated : ஏப் 09, 2022 | Added : டிச 03, 2019 | |
Advertisement
'கிணற்றை காணோம்' என ஒரு புகார். காவல் ஆய்வாளர் படை, கிணற்றை தேடும். புகார்தாரர் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆய்வாளர், விரக்தியில் சீருடையை கழற்றி, சக போலீசாரிடம் கொடுத்து, 'சுடல வேலய விட்டே போயிட்டதா சொல்லு...' என்பார். புகார்தாரரிடம், 'முதல்ல கிணத்த காணலெம்ப, கொஞ்சநாள் கழிச்சி ஊர காணலெம்ப, அடுத்து உன்னையே காணலெம்ப... நீ இருக்க ஊருல நான் இருக்க மாட்டேண்டா... அஞ்சு
 சினிமாவில் வாய்ப்பு தேடியே போதையில் தொலைந்தவர்கள்

'கிணற்றை காணோம்' என ஒரு புகார். காவல் ஆய்வாளர் படை, கிணற்றை தேடும். புகார்தாரர் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆய்வாளர், விரக்தியில் சீருடையை கழற்றி, சக போலீசாரிடம் கொடுத்து, 'சுடல வேலய விட்டே போயிட்டதா சொல்லு...' என்பார். புகார்தாரரிடம், 'முதல்ல கிணத்த காணலெம்ப, கொஞ்சநாள் கழிச்சி ஊர காணலெம்ப, அடுத்து உன்னையே காணலெம்ப... நீ இருக்க ஊருல நான் இருக்க மாட்டேண்டா... அஞ்சு லட்சம் ரூவா கொடுத்து வேலைக்கு சேர்ந்தேன். அஞ்சே நிமிஷத்துல சோலிய முடிச்சிட்டானே' எனக் கூறி புறப்படுவார். 'எத்தனை அதிகாரி போனாலும் கவலையில்ல, என்கிட்ட கிணறு வெட்டிய ரசீது இருக்குடா, சுப்ரீம் கோட்டு வரைக்கும் போவேண்டா.. எனக் கூறுவார் புகார்தாரர்.

இது, ஒரு நிஜ சம்பவம் போன்ற காமெடி. புகார்தாரர் நடிகர் வடிவேல். ஆய்வாளர் சுடலையாக, நடிகர், 'நெல்லை' சிவா.கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் உள்ள காமெடி தான், நெல்லை சிவாவை, மக்கள் மத்தியில் கொண்டு சென்றது. அவரிடம், 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்து பேசியதிலிருந்து...சினிமாவுக்கு முன், 'நெல்லை' சிவா குறித்து?நெல்லை மாவட்டம், பணக்குடி அருகே, வேப்பிலாங்குளம் கிராமம், சொந்த ஊர். நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். 10ம் வகுப்பு வரை படித்தேன். சிவாஜியின் தீவிர ரசிகன். அப்போதே, காமெடியாக பேசி, பிறரை சிரிக்க வைப்பேன். காமெடி, எனக்குள் இயல்பாக வந்தது. நண்பர்கள் துாண்டுதல் தான், என்னை சினிமாவுக்குள் தள்ளியது. ஏமாளி ஆகி தான், சினிமாவுக்குள் நுழைய முடிந்தது.ஏமாற்றியது யார்?


சில ஆயிரம் ரூபாயுடன், சென்னையில் இறங்கினேன். ஒரு தலை ராகம் படம் வெளியான நேரம். தினசரி, 2 ரூபாய் வாடகையில், விடுதியில் துாக்கம். இயக்குனர்களிடம் அழைத்துச் செல்வதாக, ஏ.வி.எம்., உருண்டையை காட்டி, ஒரு நபர், 500 ரூபாய் பறித்துச் சென்றார். கதாநாயகன் ஆக்குவதாக, 500 ரூபாய் வாங்கி ஏமாற்றினார் ஒரு நாடக நடிகர்.

நடிகர் சங்கத்தில் சேர்ப்பதாக, 500 ரூபாய் வாங்கி, நடிகர் சங்க வாசலில் விட்டு, சிட்டாய் பறந்தார் ஒருவர். இப்படி பல ஏமாற்றங்களை நானும் சந்தித்துள்ளேன். ஒரு வழியாக, நடிகர் சங்கத்தில் சேர்ந்து, சினிமா வாய்ப்புகளை தேடினேன்.முதல் பட அனுபவம்...


ஆண்பாவம் படத்தில், திரையரங்கில், 'பெட்டி வரவில்லை' என, பேசிய வசனம். நடிக்கும் போது, இயக்குனரிடம் அடி வாங்கினேன். திரைத்துறையினரிடம் என்னை கொண்டு சென்றது, அஜித்தின், அட்டகாசம் படம். கிணற்றை காணோம் காமெடி, என்னை மக்களிடம் கொண்டு சென்றது.நெல்லை வட்டார தமிழ் வசனம் குறித்து?


நடிகர் நாகேஷுடன் நடித்தபோது, வசனத்தில், 'நெல்லை' வட்டார தமிழை பயன்படுத்தினேன். நாகேஷுக்கு மிகவும் பிடித்து, 'அதையே பின்பற்று' என்றார். நெல்லை முழுதும் சென்று, இரண்டு ஆண்டுகள் பல சொற்களை சேகரித்தேன். அந்த தமிழ் தான், இப்போது வாழ வைக்கிறது.


சமீபத்தில் வந்த சூரி, யோகிபாபு போன்றோர் கோலோச்சுகிறார்களே!


சக நடிகர்களை, பொறாமையாக, காழ்ப்புணர்ச்சியாக பார்ப்பது தவறு. அது தனக்கே வேட்டு வைத்துவிடும். அவரவருக்கு, எது அமையுமோ அது தான் கிடைக்கும். திறமைக்கு எப்போதும், சினிமாவில் இடம் உள்ளது. அதற்கான சூழல் அமைய வேண்டும்.சினிமாவில் காணாமல் போனவர்கள் குறித்து?நான் சினிமாவில் நுழையும்போது, என்னைப்போல் பலர் வாய்ப்பு தேடி அலைந்தனர். வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், போதை பழக்கத்தால் தொலைந்தவர்கள் அதிகம். எனக்கு, மது, புகை போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை.இது தான், இத்தனை ஆண்டுகள் என்னை சினிமாவில் வைத்து உள்ளது.சினிமாவில் புரிந்ததும், புரியாததும் எது?


நான், 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்களில் நடித்து, வீட்டுக்கு வரும் போது, நானும் பெரிய ஆளாக வருவேன் என, கனவுகளுடன் துாங்குவேன். நடித்த காட்சியை துண்டிக்கும் போது, ஏமாற்றம் பல மடங்கு அதிகரிக்கும். சமீபத்தில், மெர்சல், அசுரன் படங்களில் நடித்த போதும், அதுபோல் தான்..


கைவசம் காமெடி வசனங்கள் உள்ளதாமே!


நாகேஷ், செந்தில், கவுண்டமணி, வடிவேல் காமெடிகளில், சமூக சிந்தனை கலந்திருக்கும். தற்போது, கதை ஓட்டத்தில், போகிற போக்கில் காமெடி வசனம் பேச வேண்டி உள்ளது. பல நல்ல காமெடி வசனங்கள் வைத்துள்ளேன். என்னை பயன்படுத்த சரியான நபர்கள் தான் அமையவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X