சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : டிச 03, 2019
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் தான் இதற்கு முன் அவரை, தமிழர் இல்லை; வேற்று மாநிலத்தை சேர்ந்தவர் என்றீர்கள். இப்போது, அவரை பாராட்டுகிறீர்கள். பின்னணியில் வேறு காரணம் ஏதும் உண்டா...' என, எண்ணத் தோன்றும் வகையில், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேச்சு: ரஜினி என் உயிர் மூச்சுக்கும் மேலானவர். சமூகத்தில் சிறந்த அறிவாளிகள், விஞ்ஞானிகளை கண்டுபிடித்து விடலாம். ஆனால், நல்ல மனிதர்களை எளிதாக கண்டுபிடித்து விட முடியாது; ரஜினி நல்ல மனிதன். இதுநாள் வரை, அடுத்தவர் இதயத்தைக் காயப்படுத்தாத ஓர் இதயம் என்றால், அது ரஜினி மட்டுமே. ரஜினியை போல் யாரும் இருக்க முடியாது.

'தெலுங்கானா மாநில கவர்னர் ஆன பிறகும், உங்களுக்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு நீடிக்கிறதே... அது போலவா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு: தமிழின் தொன்மைக்கும், ஆன்மிகத்திற்கும், தொன்மையான இணைப்பு உள்ளது. வேதங்கள் மூடிய கதவை திறக்கவும், திறந்த கதவை மூடவும், தமிழ் இசை உதவியது. ஆகவே, தமிழிசையும், தமிழும், ஆன்மிகத்தில் இருந்து பிரிக்க முடியாதது.

'இலங்கை தமிழர்களுக்கு மட்டுமே குரல் கொடுத்து வந்த நீங்கள், இப்போது, உள்நாட்டு தமிழர் பற்றியும் குரல் கொடுக்கத் துவங்கி விட்டீர்கள் போலிருக்கிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: மரபு வழி வேளாளர்கள் அனைவரையும், தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து, பட்டியல் பிரிவிலிருந்து, இந்த இனத்தவரை விலக்கி, மத்திய அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

'எழுத்தாளர்கள் தான், இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதால், இவ்வாறு கூறுகிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: எழுத்தாளர்கள் சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை எழுத வேண்டும். அவ்வாறு எழுதும் எழுத்தாளர்கள், தங்கள் எழுத்துகளை, தங்கள் பிள்ளைகளும் படிப்பர் என்ற எண்ணத்துடன், பொறுப்புடன் எழுத வேண்டும்.

'உங்கள் கட்சி விமர்சனங்களை, தி.மு.க.,வும், அதன் தலைவரும் கண்டுகொள்வதில்லையே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செயலர் வானதி சீனிவாசன்: ஆட்சியில் இல்லாத போதும், தி.மு.க.,வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் நாங்கள் விமர்சிக்கிறோம் என்பதற்கு காரணம் உண்டு. மோடி எதிர்ப்பு அணிக்கு, தமிழகத்தில் ஸ்டாலின் தான் தலைமை வகிக்கிறார். இந்த விமர்சனங்கள் எல்லாம் அரசியல் ரீதியாகத் தான் இருக்குமே தவிர, தனிப்பட்ட முறையில் இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X