சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 'டவுட்' தனபாலு

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: ஈ.வெ.ரா.,வும், திராவிட இயக்கமும், அதன் அரும்பெரும் தலைவர்களும், போராடி பெற்றுத் தந்த கல்வி உரிமை பறிபோகும் நிலை உள்ளது. அதை மீட்க, உயிரை பணயம் வைத்து, அறப்போர் துவங்குவோம்.

'டவுட்' தனபாலு: இதுபோல, பல பிரச்னைகளுக்கு, முன்னர் நீங்கள் விடுத்த அறைகூவல்களால், எந்த பயனும் இல்லாததால், இப்போது, 'உயிரை பணயம் வைப்போம்...' என்ற அளவுக்கு, உங்கள் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுகிறீர்களா? சரி... கல்வி உரிமை எங்கே பறிபோகிறது; எங்கே பறிக்கப்பட்டது என்ற, 'டவுட்'டுக்கு முதலில் பதில் சொல்லுங்க!

***

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்: உள்ளாட்சி தேர்தலில், அரசியல் கூடாது என்பது எங்கள் கருத்து. உள்ளாட்சி தேர்தலை, கட்சி சின்னங்கள் அடிப்படையில் நடத்தக் கூடாது என, தேர்தல் ஆணையம், மத்திய -- மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

'டவுட்' தனபாலு: உள்ளாட்சி தேர்தலில், கட்சி சார்பில் போட்டி இருந்தால், குக்கிராமங்களிலும் அரசியல் என்ற வியாதி புகுந்து, மக்களுக்குள் விரோதம் ஏற்பட்டு விடும் என்பதற்காக, முன்னர், உள்ளாட்சி தேர்தலில் கட்சி அரசியல் இல்லாமல் இருந்தது. இப்போது நீங்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், உங்களின் கூட்டாளி கட்சியான, பா.ஜ., கூட இதை ஆதரிக்குமா என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: '1989ல், எம்.எல்.ஏ., ஆன நான், இப்போது முதல்வராக இருக்கிறேன். அதே ஆண்டில், எம்.எல்.ஏ., ஆன ஸ்டாலினால், இன்னும் முதல்வராக முடியவில்லை' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசியுள்ளார். மண் புழு போல ஊர்ந்து, சுய மரியாதையை இழந்து, முதல்வர் பதவியை பெற நான் விரும்பவில்லை.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதில், 'லாஜிக்' இல்லை. எப்படியோ அவர் முதல்வர் ஆகி விட்டார்; உங்களால் ஏன் இன்னும் முடியவில்லை என்பது தான் அவரின் கேள்வியாக உள்ளது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், மண் புழு, பூச்சி என, சொல்வதெல்லாம் நியாயமா... மேலும், திருமண விழாவில், மணமக்களை ஆசிர்வதிக்கச் சென்ற இடத்தில், இப்படி கோபமாக பேசுவது சரியா என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
03-டிச-201919:46:40 IST Report Abuse
karutthu வேறு எங்கு பேசமுடியும்? சட்டசபையில் இப்படி பேசமுடியுமா ? எங்கு எதைப்பேச வேண்டும் என்பது அவருக்கு தான் தெரியவேண்டும் .அவர் ஸ்டேஸ்ஸை அவர் தான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-டிச-201906:04:42 IST Report Abuse
D.Ambujavalli கூவத்தூர் கூத்துக்கு ஸ்பான்சர் செய்த பரிசாக சசிகலா தூக்கிப் போட்டது தானே இந்தப் பதவி இதற்கே இந்தக் கொக்கரிப்பு என்றால், இவர் தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் ஆதரவுடன் முதல்வர் ஆகி இருந்தால் இன்னும் என்னென்ன பேசுவாரோ?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
03-டிச-201904:29:29 IST Report Abuse
Cheran Perumal பிறரை வசைபாட திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்துவதே திமுக வின் பழக்கம். அதை அறிந்தேதான் மண வீட்டாரும் அவர்களை அழைக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X