செங்குன்றம் : இரண்டாக பிளந்து, உறுதியிழந்துள்ள பெரிய புளிய மரம், சாலையில் விழுந்து, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சி, செங்குன்றம் - பொத்துார் சாலையோரம், 10க்கும் மேற்பட்ட பெரிய புளிய மரங்கள் உள்ளன.அவற்றில் ஒரு மரம், நேற்று முன்தினம் திடீரென, இரண்டாக பிளந்து, உறுதியிழந்துள்ளது.பலத்த மழை, காற்று காரணமாக, அந்த மரம், எந்த நேரத்திலும், சாலையில் விழுந்து, விபத்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இதனால், மாநகர பேருந்து போக்குவரத்தும் பாதிக்கும்.நெடுஞ்சாலை துறையினர், இந்த பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.