செங்குன்றம் : பராமரிப்பு பணியில் தொடரும் அலட்சியம் காரணமாக, மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதை, சீரமைக்க முடியாமல், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, திணறிய மின் வாரியத்தால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
செங்குன்றத்தில், அனைத்து மின் இணைப்புகளும், போதிய பராமரிப்பற்ற நிலையில் உள்ளன. ஆனால், ஒவ்வொரு மாதமும், மின் பராமரிப்பு பணி என, காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இந்நிலையில், செங்குன்றம் மின் வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில், நேற்று மாலை, 4:20 மணி அளவில், தடையான மின்சாரம், இரவு, 7:30 மணிக்கு பின் சீரானது.
இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.மின் இணைப்பில், எங்கு பழுதானது என, கண்டறிய முடியாமலும், அதன்பின், அதை உடனடியாக, சீரமைக்க முடியாமலும், 2 மணி நேரத்திற்கு மேலாக, மின் வாரியத்தினர் திணறினர்.இதனால், அவதிப்பட்ட மக்கள், மாதந்தோறும், எதற்காக பராமரிப்பு பணி நடத்தப்படுகிறது என, அதிருப்தி அடைந்தனர்.