சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: காற்று மாசுபாட்டுக்கு தீர்வு

Added : டிச 03, 2019
Advertisement

உலகில் பல்வேறு நாடுகளிலும் காற்று மாசுபாடு பிரச்னை தலைதுாக்கியுள்ளது. இதற்கு வாகன பெருக்கம், தொழிற்சாலை, தொழில்நுட்பம் என பல காரணங்கள் உள்ளன. அதிகளவில் மரங்களை நடுவதுதான், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு சுலபமான மற்றும் செலவு குறைந்த நடவடிக்கை. இது மிக எளிமையான வழி என பரிந்துரைக்கப்படுகிறது. தொழிற்சாலைகள், முக்கிய சாலைகள், மின்சார நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் அருகில் அதிகளவில் மரங்கள் இருந்தால், அது காற்று மாசுபாட்டில் 27 சதவீதத்தை குறைக்கிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம்: பெரிய கட்சி

மத்தியில் பா.ஜ., ஆட்சி செய்கிறது. 2019 மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 303ல் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சட்டசபை தொகுதிகளின் படி பார்த்தால், மொத்தமுள்ள 4,120 தொகுதிகளில் 2,089 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் வெற்றி சதவீதம் 51. ஆனால் 2019 நவ., 28 அடிப்படையில் நாடு முழுவதும் சட்டசபை தொகுதிகளை பார்க்கும் போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சதவீதம் 32 ஆக உள்ளது. இருப்பினும் பா.ஜ., தான் நாட்டில் அதிக எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட கட்சியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X