சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழைநீர் தேங்கிய வயல்: உதவி இயக்குனர் ஆய்வு

Added : டிச 03, 2019
Advertisement
 மழைநீர் தேங்கிய வயல்: உதவி இயக்குனர் ஆய்வு

புதுச்சத்திரம்:தினமலர் செய்தி எதிரொலி காரணமாக, மழைநீர் தேங்கிய வயல்களை, வேளாண் உதவி இயக்குனர் விஜயராகவன் நேற்று ஆய்வு செய்தார்.

புதுச்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் வயலாமூர், பூவாலை, அலமேல்மங்காபுரம், மணிக்கொல்லை ஆகிய பகுதிகளில் நெல் பயிரிட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதுகுறித்து விவசாயிகள் கவலையடைந்துள்ளதாக 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

அதனை தொடர்ந்து பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் விஜயராகவன், மழைநீர் தேங்கிய வயல்களை பார்வையிட்டார். பின்னர் மழைநீர் வடிந்த உடன், ஏக்கருக்கு 20 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ், 10 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும் என, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வேளாண் அலுவலர் ரமேஷ், துணை வேளாண் அலுவலர் சிவசங்கரன், உதவி வேளாண் அலுவலர்கள் நடராஜன், மணிவாசகம், பிரபு உள்ளிட்ட விசாயிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X