சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிவாரண பொருட்கள் பெறுவதில் தள்ளுமுள்ளு

Added : டிச 03, 2019
Advertisement

கடலுார்:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கும் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடலுாரில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வீடு இடிந்து 3 பேர் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, கூத்தப்பாக்கம் பள்ளியில், தி.மு.க., சார்பில் நடந்தது. 5 கிலோ அரிசி, பிஸ்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 500 பேருக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு விட்டது.காத்திருந்த பொதுமக்களில் 4 பேருக்கு மட்டும் ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு, புறப்பட்டு சென்றார்.

காத்திருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு நிவாரண பொருட்களை வாங்க சென்றனர். அதில் சிலர் தவறி விழுந்தனர். அவர்களை மிதித்துக்கொண்டு சென்று பலர் நிவாரண பொருட்களை அள்ளி சென்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X