துார் வாரிய குளங்களில் தண்ணீர் சிதம்பரம் நகர மக்கள் மகிழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துார் வாரிய குளங்களில் தண்ணீர் சிதம்பரம் நகர மக்கள் மகிழ்ச்சி

Added : டிச 03, 2019
 துார் வாரிய குளங்களில் தண்ணீர் சிதம்பரம் நகர மக்கள் மகிழ்ச்சி

சிதம்பரம்:சிதம்பரம் நகரில் உள்ள பிரதான குளங்களில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிதம்பரம் நகராட்சியில் ஞானப்பிரகாசக் குளம், தில்லையம்மன் குளம், ஓமக்குளம், தட்சன் குளம், அண்ணா குளம் என 12 குளங்கள் உள்ளன. இவை பராமரிக்கப்படாத காரணத்தால், ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவு நீர் தேங்கி நிற்கும் குட்டையாக இருந்தது.இதனால் சிதம்பரம் நகரில் 20 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் 40 அடிக்கு கீழ் சென்றது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அற்றப்பட வேண்டும் என்ற சென்னை உச்சநீதி மன்றத்தின் உத்தரவின் பேரில், குளங்கள் துார்வாரப்பட்டன.

தற்போது நகரில் உள்ள ஓமக்குளம், ஞானப்பிரகாச குளம், தில்லையம்மன் குளம், அண்ணா குளம், நாகசேரிக் குளம் போன்றவை துார்வாரப்பட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் வடக்கிழக்கு பருவ மழையால் இவை வேகமாக நிரம்பி வருகின்றன. 5க்கும் மேற்பட்ட குளங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், நகர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X