சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவைக்காக கொதிகலன் இளஞ்சூடேற்று விழா நடந்தது.
ஆலை தலைவர் கானுார் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மேலாண் இயக்குனர் சாதனைக்குறள், துணை தலைவர் விநாயகமூர்த்தி, நிர்வாக இயக்குனர்கள் கலியமூர்த்தி, சிவக்குமார், சக்திவேல், ஆதிமூலம், அலுவலக மேலாளர் முனியம்மாள், தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன், கணக்கு அலுவலர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கரும்பு அலுவலர்கள் ராஜதுரை, ரவிகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் கொதிகலன் சூடேற்றும் பணியை துவக்கி வைத்தனர்.ஆலையின் தலைவர் கானுார்பாலசுந்தரம் கூறுகையில், 'இந்தாண்டு 3 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அரவை துவங்குவதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 டன் கரும்பு அரவை செய்வதற்கான பணி நடந்து வருகிறது.விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குகள் பணம் பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நலிவடைய இருந்த ஆலையை, லாபத்தில் இயங்குவதற்காக பணிகள் நடந்து வருகிறது' என்றார். புவனகிரி ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம், ஜெயசீலன், கூட்டுறவு சொசைட்டி தலைவர் பிரித்திவி,சேத்தியாத்தோப்பு நகர செயலர் மணிகண்டன், சற்குரு, கோவிந்தசாமி, ஆண்டவர்செல்வம் கலந்து கொண்டனர்.