பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் இல்லாத காராமணிக்குப்பம் வாரச்சந்தை

Added : டிச 03, 2019
Advertisement
 அடிப்படை வசதிகள் இல்லாத காராமணிக்குப்பம் வாரச்சந்தை

நெல்லிக்குப்பம்:காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில், சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு சொந்தமாக அதே பகுதியில், கடலூர்- பண்ருட்டி சாலையை ஒட்டி 6 ஏக்கர் நிலம் உள்ளது.இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கும். இதில் அதிகளவு கருவாடு, காய்கறிகள் விற்பனைக்கு வரும். 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பல ஆயிரம் நுகர்வோரும் கூடுவர்.

வாரச்சந்தையில் கடை போடுபவர்கள் மற்றும் கால்நடை விற்பனை செய்பவர்களிடம் கட்டணம் வசூல் செய்ய, ஆண்டுதோறும் அறிநிலையத்துறை மூலம் ஏலம் நடைபெறும். நடப்பு ஆண்டுக்கு 6 லட்சத்து 47 ஆயிரம் ரூயாய் ஏலம் போனது.லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்தும், அறநிலையத்துறையினர் சந்தை இடத்தில் எந்த வசதியும் செய்து தரவில்லை. திறந்த வெளியிலேயே கடைகள் அமைப்பதால் மழை நேரத்தில் வியாபாரிகளும் பொருட்கள் வாங்க வருபவர்களும் மிகவும் சிரமபடுகின்றனர்.

நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில், மழை பெய்ததால் தார் பாய்கள் மூலம் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்தனர். மழை பெய்ததாலும் காய்கறிகள் விலை அதிகமாக இருந்ததாலும் குறைந்தளவே பொதுமக்கள் சந்தைக்கு வந்தனர். அறநிலைத்துறை மூலம் நிரந்தர கொட்டகை அமைத்து தர வேண்டுமென வியாபாரிகள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X