பொது செய்தி

தமிழ்நாடு

முதல் குறைதீர் கூட்டம்

Added : டிச 03, 2019
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத் தின், முதல் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தற்காலிக அலுவலகத்தில், நேற்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா, வருவாய் கோட்டாட்சியர் செல்வம் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.காலை, 10:15 மணிக்கு, கூட்டம் துவங்கியதும், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் சல்குரு, நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு, வீட்டுமனை பட்டா மற்றும் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி, கலெக்டரிடம் முதல் மனு அளித்தார்.இதையடுத்து, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், கடப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வந்தோர், மனை பட்டா, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட தேவைகளுக்காக, பலரும் மனு அளித்தனர்.

குறைதீர் நடந்து கொண்டிருந்தபோதே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், குறைதீர் கூட்டம், 10:30 மணிக்கு முடிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர், பெறப்பட்ட, 150க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பல பகுதியிலிருந்து வந் தோர், கூட்டம் தொடர்ந்து நடைபெறாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X