பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள பெருக்கு அபாயம்

Added : டிச 03, 2019
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 10 கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி ஈசா ஏரி, சில தினங்களாக பெய்த மழையால், நிரம்பி வழிகிறது.இங்கிருந்து வெளியேறும் நீர், பாலுார், குருவன்மேடு, ரெட்டிப்பாளையம், திம்மாவரம் வழியாக, செங்கல்பட்டு நீஞ்சல் மடுவு அணைக்கட்டில் சேகரமாகிறது.ெவளியேற்றம்இந்த நீர்வழி தடத்தில் உள்ள, பாலுார், ஆத்துார், திம்மாவரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த அணைக்கட்டின், ஒன்பது ஷட்டர்களில், ஆறு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, விநாடிக்கு, 5,000 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

இந்நிலையில், மழையால், செங்கல்பட்டு அடுத்த, காந்தலுார் கிராமத்தில், தனியார் வீட்டுமனை குடியிருப்பு பகுதியில், தண்ணீர் சூழ்ந்துள்ளது.உத்தரவுஇதனால், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அங்கிருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு சென்றனர்.தொடர்ந்து, மழை பெய்வதால், செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரம் மஹாலட்சுமி நகர் பகுதியிலும், 25க்கும் மேற்பட்ட வீடுகளில், தண்ணீர் சூழந்து உள்ளது. மேற்கண்ட பகுதிகள் மற்றும் பாலாற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால், பாலாற்றையொட்டி உள்ள கிராமங்களை, தொடர்ந்து கண்காணிக்கும்படி, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, வட்டார வளர்ச்சி துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ், நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X