சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜே.சி.பி., மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 03, 2019
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு:கன மழையினால், புளியமரம் வேரோடு ஜே.சி.பி., மீது சாய்ந்ததால், சென்னை-கும்பகோணம் சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை-கும்பகோணம் சாலையில், கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அள்ளூர் அருகே, நேற்று காலை 11.15 மணியளவில், கனமழையினால் புளியமரம் வேரோடு சாய்ந்து, அவ்வழியாக சென்ற ஜே.சி.பி., இயந்திரம் மீது விழுந்தது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து
 ஜே.சி.பி., மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சேத்தியாத்தோப்பு:கன மழையினால், புளியமரம் வேரோடு ஜே.சி.பி., மீது சாய்ந்ததால், சென்னை-கும்பகோணம் சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை-கும்பகோணம் சாலையில், கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அள்ளூர் அருகே, நேற்று காலை 11.15 மணியளவில், கனமழையினால் புளியமரம் வேரோடு சாய்ந்து, அவ்வழியாக சென்ற ஜே.சி.பி., இயந்திரம் மீது விழுந்தது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா மற்றும் போலீசார், போக்குவரத்தை தீப்பாய்ந்த நாச்சியார்கோவில் வழியாக திருப்பி விட்டனர்.

பின்னர் சாலையில் விழுந்த மரத்தினை ஜே.சிபி., இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் செல்லும் பஸ்கள், லாரிகள் போக்குவரத்து பாதிப்பால் காலதாமதமாக சென்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X