சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் தொடர் மழை 9 வீடு சேதம்;

Added : டிச 03, 2019
Advertisement

திருத்தணி : இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், திருத்தணி தாலுகாவில், ஒன்பது வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்து, இருவர் படுகாயம் அடைந்தனர்; மேலும், ஒரு பசு மாடு, 500 வாத்துகள் இறந்துள்ளன.

திருத்தணி தாலுகாவில், இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழை பெய்து வருவதால், ஏரிகள், குளம் உட்பட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.இந்நிலையில், திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட மணவூர் பிர்காவில், மூன்று வீடுகளும், திருவாலங்காடு பிர்காவில், ஒரு வீடும், கனகம்மாசத்திரம் பிர்காவில், மூன்று, திருத்தணி பிர்காவில், இரண்டு வீடுகள் என, மொத்தம், ஒன்பது வீடுகள் மழையால் சுவர்கள் இடிந்து விழுந்து, முழுவதும் சேதம் அடைந்தன.

இதில், திருத்தணி பிர்காவில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில், தாய் கோகிலா, மகன் அக்பர் படுகாயம் அடைந்தனர்.கார்த்திகேயபுரத்தில், ஒரு பசு மாடு மின்சாரம் பாய்ந்து இறந்தது.இதுதவிர, பூனிமாங்காடு பகுதியில், குளிர் மற்றும் மழையில், 500 வாத்து குஞ்சுகள் இறந்தன என, திருத்தணி வருவாய் துறையினர் தெரிவித்தனர்.மேலும், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் செல்வதால், இரவு நேரத்தில் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் மற்றும் அங்கு செல்ல வேண்டாம் என, திருத்தணி தாசில்தார் சுகந்தி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X