விபத்தில் பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பெண் பலி

Added : டிச 03, 2019

திருத்தணி : சித்துார் மாவட்டம், விஜயபுரம் மண்டலம், மலர்நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர் மனைவி கிருஷ்ண வேணி, 40, நரசுரெட்டி மனைவி நரசிம்மா, 60, புருஷோத்தமன் மனைவி பாரதி, 40. இவர்கள் ஆற்காடுகுப்பத்தில் இருந்து, வீட்டிற்கு செல்வதற்கு கோவில் அருகே உள்ள சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது, திருத்தணியில் இருந்து, திருவள்ளூர் நோக்கி சென்ற இன்னோவ கார், மூன்று பெண்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில், கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மீதமுள்ள நரசிம்மா, பாரதி படுகாயங்களுடன் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X