சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி பசு மாடு பலி

Added : டிச 03, 2019
Advertisement

மந்தாரக்குப்பம்:மந்தாரக்குப்பம் கடைவீதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பசுமாடு இறந்தது.கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மந்தாரக்குப்பம் கடைவீதி, பெரியாக்குறிச்சி, வடக்குவெள்ளுர், குறவன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. சாலையில் படுத்து உள்ள மாடுகள் தீடீரென எழுந்து செல்வதால் வாகனங்களில் செல்வோர் மாடு மீது மோதாமல் இருக்க வாகனங்களை திருப்பும் போது தடுமாறி எதிர்பாராத விதமாக அடிக்கடி வாகன விபத்துக்கள் சிக்குகின்றனர்.நேற்று அதிகாலை சாலையில் படுத்திருந்த பசு மாடு மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்தக் கோரியும், கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X