பெண் டாக்டர் கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்| NHRC issues notice to Centre, states, police chiefs over incidents of sexual assault | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண் டாக்டர் கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (15)
Share
பெண் டாக்டர் கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஐதராபாத்: தெலுங்கானாவில், தலைநகர் ஐதராபாத் அருகே, புறநகர் பகுதியான ஷாம்ஷதாபாதில், 27 வயது கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, டிரக் டிரைவர்கள், கிளீனர்கள் என, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.'இந்த கொடூரத்தைச் செய்த குற்றவாளிகளை விசாரணையில்லாமல் துாக்கிலிட வேண்டும்' என பார்லி.யில்பெண் எம்.பி.க் கள் ஆவேச குரல் எழுப்பினர்.


latest tamil newsநாடு முழுவதும் பலர் கொந்தளிப்புடன் உள்ள நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய , மாநில அரசு காவல்துறை தலைவர்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு உயரதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் 6 வாரங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X